செவ்வாய், 9 மே, 2017

பெய் விரட்டும் மந்திரம்

திடீர் விபத்து,தற்கொலை,போர்/கலகம்/கொலை/எதிர்பாராத மரணம் இவற்றால் இறப்பவர்கள் முறைப்படி இறக்கும் காலம் வரை ,எங்கே இறந்தார்களோ,அங்கேயே ஆவியாக இருக்க வேண்டும்.இறந்தது ஆண் எனில் அதற்கு பேய் என்றும், பெண் எனில் பிசாசு என்றும் பெயர்.நம் சூட்சும உடல் ஸ்தூல உடலான ஐம்பூத உடலில் இருந்து பலவந்தமாக பிரிக்கப்படுவதால் இறந்தவரின் ஆவி எந்த இடத்தில் மரணமடைந்ததோ அங்கேயே சுற்றும்.சுமார்20 அடி சுற்றளவுக்குள் சுற்றும்.வெளியேஎங்கும் செல்லமுடியாது.உயரேயும் பறக்க முடியாது


"அகத்தியர்"

"கட்டடா பேயினது முறையைக்கேளுகாணுகிற
குணங்காணும் கருத்தில் சொல்வேன்இஷ்டமுடன்
 பெண்களையாண் ரூபமாக்கும்மினிதான ஆணானால்
 மோகினியைக் காட்டும்நட்டிரவில் சாய்பிதற்றும்
கருவழிக்கும்நளிர்சுரங்கள் பெரும்பாடு
நடுக்கும்பித்தம்முட்டெனவே பெண்புருஷன்
கூடிவாழ்வாள்.
முறையையுட னதுபோகு முறையைக்கேளே."-


"கேளடா பிசாசினது பலத்தைப் பார்த்துக்கிளர்பஞ்சா
க்ஷரத்தினது கிருபைநோக்கிஆளடா கோழிபன்றி
யாடுகாவுஆஇஅரிஓம் உருவைந் நூறுபோடுதாளடா காரீயம்
செம்புதங்கம்தகடெழுதி யிடைக்கழுத்தில் சிரசில்கட்டபாழடா
 அலகையென்ற பேய்களெல்லாம்பறக்குமடா பிரமராட்ச சும்பாரே."-

பேய் பிடித்த பெண்கள் தங்களின் இயல்புகளை இழந்து ஆண்களைப் போல முரட்டுத் தனமான இயல்புகளை வெளிக் காட்டுவர். இதைப் போல ஆண்களை பிடித்த பேய்கள் மோகக் கன்னியாய் வந்து அவர்களின் இந்திரியத்தை நஷ்டமாக்கும் என்கிறார். மேலும் கருவுற்ற பெண்ணின் கருவை அழிப்பதுடன், காய்ச்சலும், உடல் நடுக்கமும், பித்த உபரியும் தருமாம். ஆண்,பெண் கூடிவாழ விடாமல் செய்யுமாம். இப்படி கொடுமையான குணாம்சங்களைக் கொண்ட பேய், பிசாசு மற்றும் பிரம்ம ராட்சதர்களை விரட்டும் முறையையும் பின் வருமாறு சொல்லியிருக்கிறார்.


காரீயம் அல்லது செப்பு அல்லது தங்கத்திலான தகடுகளில் ஏதேனும் ஒன்றினை எடுத்து அதில் பஞ்சாட்சர மந்திரத்தை கீறி, அதனுடன்“அ, இ, அரி, ஓம்”என்கிற பீஜாட்சர மந்திரத்தையும் எழுதிட வேண்டுமாம். பிறகு பரமேஸ்வரனது திருவடிகளை தியானித்து பஞ்சாட்சர மந்திரத்தை 500 தடவைகள் செபிக்க வேண்டும் என்கிறார். அதன் பிறகு இந்த தகட்டைபாதிக்கப் பட்டவரின் இடுப்பு அல்லது கழுத்து அல்லது தலையில் கட்ட அவர்களை பீடித்திருக்கும் பேய், பிசாசு மற்றும் பிரம்மராட்சதர்கள் விலகி அவர்கள் சுகமாவார்கள் என்கிறார் அகத்தியர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பெண்களே...! சுய இன்பம் கொள்வதால் ஏற்படும் பக்கவிளைவுகள் பற்றி தெரியுமா..?

www.facebook.com/KundaliniDhiyanaPractice உடலுறவு என்பது ஆணும் - பெண்ணும் ஒன்று சேருவதே என்று பல காலங்களாக நம்பப்பட்டு வருகிறது. ஆனால் ...