வியாழன், 11 மே, 2017

பேய் இருப்பதை அறிய

பேய் இருப்பதை அறிய


ஒரு டம்ளர் நீரைக் கொண்டு வீட்டில் கெட்ட சக்தி இருப்பதை அறிவது எப்படி?

வீட்டில் உள்ள கெட்ட சக்தியை அறிய ஓர் எளிய வழி உள்ளது. இங்கு வீட்டில் கெட்ட சக்தி அதிகம் இருப்பதை ஒரு டம்ளர் நீரைக் கொண்டு அறிவது எப்படி என்று கொடுக்கப்பட்டுள்ளது.


வீட்டில் எதிர்மறை ஆற்றல்கள்

 அதிகம் இருந்தால் தான், நாம் எந்த ஒரு செயலைசெய்தாலும், அது தோல்வியில் முடிவதுடன், துன்பங்களை அதிகம் அனுபவிக்க வேண்டியிருக்கும். ஒருவரது வீட்டில் கெட்ட சக்தி இருப்பதை அறிய ஏராளமான வழிகள் உள்ளன.இங்கு வீட்டில் உள்ள கெட்ட சக்தியை அறியும் ஓர் எளிய வழி கொடுக்கப்பட்டுள்ளது. அதுக் கொண்டு உங்கள் வீட்டில் கெட்ட சக்தி உள்ளதா என்பதை சோதித்து தெரிந்து கொள்ளுங்கள்.

ஆற்றல்கள்/

சக்திகள்நாம் எங்கு இருந்தாலும், நம்மைச் சுற்றி அங்கு சில ஆற்றல்கள் இருக்கும். வீடு என்பது ஒற்றுமைக்கான இடம். இங்கு அனைத்துவிதமான ஆற்றல்களும் சந்திக்கும். நமது உணர்வுகள், எண்ணங்கள், உணர்ச்சிகள் குறிப்பிட்ட ஆற்றல்களை உமிழும். அதே சமயம் குறிப்பிட்ட ஆற்றல்களை ஈர்க்கும்.


உறவுகள்குடும்ப உறுப்பினர்கள்,

பக்கத்து வீட்டுக்காரர்கள் அல்லது நண்பர்கள் நம் வீட்டிற்கு வரும் போது, அவர்களுடன் எதிர்மறை ஆற்றல்கள் வீட்டிற்குள் வரக்கூடும். இப்படி எதிர்மறை ஆற்றல்கள் வீட்டினுள் நுழைந்துவிட்டால், அது வாழ்க்கையையே பெரிதாக பாதிக்கும்.


விளைவுகள்வீட்டில் எதிர்மறை ஆற்றல்கள்

அதிகம் இருந்தால், அதனால் வீட்டினுள் எந்நேரமும் சண்டை சச்சரவுகள், உறவுகள் முறிவது மற்றும் வீட்டில் நல்லிணக்கத்துக்கு பங்கம் ஏற்படும். அதுமட்டுமின்றி, வீட்டில் உள்ளோர்கள் ஏதோ பேய் அடித்தது போன்று மிகுந்த களைப்புடனும், ஒய்வின்றி இருப்பது போன்றும் உணர்வார்கள். மொத்தத்தில் சந்தோஷமே இருக்காது.


கெட்ட சக்தியை அறிய தேவையான பொருட்கள்கண்ணாடி டம்ளர்கல் உப்பு

செய்யும் முறை:

கண்ணாடி டம்ளரில் மூன்றில் ஒரு பங்கு கல் உப்பு போட்டு, தண்ணீரை முழுமையாக நிரப்பி, எந்த அறையில் எதிர்மறை ஆற்றல் உள்ளது என்ற சந்தேகம் உள்ளதோ, அங்கு மறைமுகமான இடத்தில் வைத்துவிட்டு, 24 மணிநேரம் கழித்து காண வேண்டும். முக்கியமாக டம்ளர் வைத்த இடத்தை நகர்த்தக்கூடாது.


24 மணிநேரத்திற்கு பின்...

24 மணிநேரம் கழித்து அந்த டம்ளரைப் பார்க்கும் போது, அது வைத்த இடத்திலேயே எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் இருந்தால், அந்த அறையில் கெட்ட சக்தி இல்லை என்று அர்த்தம். ஒருவேளை ஏதேனும் மாற்றம் தெரிந்தால், ஏதோ ஒரு சக்தி அந்த அறையில் உள்ளது என்று அர்த்தம். இந்த முறையை வீட்டில் உள்ள வேறொரு அறையிலும் முயற்சிக்கலாம்.


செவ்வாய், 9 மே, 2017

பெய் விரட்டும் மந்திரம்

திடீர் விபத்து,தற்கொலை,போர்/கலகம்/கொலை/எதிர்பாராத மரணம் இவற்றால் இறப்பவர்கள் முறைப்படி இறக்கும் காலம் வரை ,எங்கே இறந்தார்களோ,அங்கேயே ஆவியாக இருக்க வேண்டும்.இறந்தது ஆண் எனில் அதற்கு பேய் என்றும், பெண் எனில் பிசாசு என்றும் பெயர்.நம் சூட்சும உடல் ஸ்தூல உடலான ஐம்பூத உடலில் இருந்து பலவந்தமாக பிரிக்கப்படுவதால் இறந்தவரின் ஆவி எந்த இடத்தில் மரணமடைந்ததோ அங்கேயே சுற்றும்.சுமார்20 அடி சுற்றளவுக்குள் சுற்றும்.வெளியேஎங்கும் செல்லமுடியாது.உயரேயும் பறக்க முடியாது


"அகத்தியர்"

"கட்டடா பேயினது முறையைக்கேளுகாணுகிற
குணங்காணும் கருத்தில் சொல்வேன்இஷ்டமுடன்
 பெண்களையாண் ரூபமாக்கும்மினிதான ஆணானால்
 மோகினியைக் காட்டும்நட்டிரவில் சாய்பிதற்றும்
கருவழிக்கும்நளிர்சுரங்கள் பெரும்பாடு
நடுக்கும்பித்தம்முட்டெனவே பெண்புருஷன்
கூடிவாழ்வாள்.
முறையையுட னதுபோகு முறையைக்கேளே."-


"கேளடா பிசாசினது பலத்தைப் பார்த்துக்கிளர்பஞ்சா
க்ஷரத்தினது கிருபைநோக்கிஆளடா கோழிபன்றி
யாடுகாவுஆஇஅரிஓம் உருவைந் நூறுபோடுதாளடா காரீயம்
செம்புதங்கம்தகடெழுதி யிடைக்கழுத்தில் சிரசில்கட்டபாழடா
 அலகையென்ற பேய்களெல்லாம்பறக்குமடா பிரமராட்ச சும்பாரே."-

பேய் பிடித்த பெண்கள் தங்களின் இயல்புகளை இழந்து ஆண்களைப் போல முரட்டுத் தனமான இயல்புகளை வெளிக் காட்டுவர். இதைப் போல ஆண்களை பிடித்த பேய்கள் மோகக் கன்னியாய் வந்து அவர்களின் இந்திரியத்தை நஷ்டமாக்கும் என்கிறார். மேலும் கருவுற்ற பெண்ணின் கருவை அழிப்பதுடன், காய்ச்சலும், உடல் நடுக்கமும், பித்த உபரியும் தருமாம். ஆண்,பெண் கூடிவாழ விடாமல் செய்யுமாம். இப்படி கொடுமையான குணாம்சங்களைக் கொண்ட பேய், பிசாசு மற்றும் பிரம்ம ராட்சதர்களை விரட்டும் முறையையும் பின் வருமாறு சொல்லியிருக்கிறார்.


காரீயம் அல்லது செப்பு அல்லது தங்கத்திலான தகடுகளில் ஏதேனும் ஒன்றினை எடுத்து அதில் பஞ்சாட்சர மந்திரத்தை கீறி, அதனுடன்“அ, இ, அரி, ஓம்”என்கிற பீஜாட்சர மந்திரத்தையும் எழுதிட வேண்டுமாம். பிறகு பரமேஸ்வரனது திருவடிகளை தியானித்து பஞ்சாட்சர மந்திரத்தை 500 தடவைகள் செபிக்க வேண்டும் என்கிறார். அதன் பிறகு இந்த தகட்டைபாதிக்கப் பட்டவரின் இடுப்பு அல்லது கழுத்து அல்லது தலையில் கட்ட அவர்களை பீடித்திருக்கும் பேய், பிசாசு மற்றும் பிரம்மராட்சதர்கள் விலகி அவர்கள் சுகமாவார்கள் என்கிறார் அகத்தியர்.

பெண்களே...! சுய இன்பம் கொள்வதால் ஏற்படும் பக்கவிளைவுகள் பற்றி தெரியுமா..?

www.facebook.com/KundaliniDhiyanaPractice உடலுறவு என்பது ஆணும் - பெண்ணும் ஒன்று சேருவதே என்று பல காலங்களாக நம்பப்பட்டு வருகிறது. ஆனால் ...